தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கனமழையால் நிரம்பிய சித்திரை குளம் - கண்டு ரசித்த பொதுமக்கள்

மயிலாப்பூரிலுள்ள சித்திரைக் குளத்தில் நீண்ட நாள்களுக்குப் பிறகு தண்ணீர் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவதை அப்பகுதி மக்கள் குடும்பம் குடும்பமாக சென்று வேடிக்கை பார்த்தனர்.

குளத்தை ரசித்த மக்கள்
குளத்தை ரசித்த மக்கள்

By

Published : Nov 11, 2021, 5:20 PM IST

சென்னை: சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. ஆங்காங்கே தேங்கியிருக்கும் தண்ணீரை மாநகராட்சி அலுவலர்கள் வெளியேற்றி வருகின்றனர்.

மயிலாப்பூரிலுள்ள சித்திரை குளம் மழை நீரால் நிரம்பி அதிலிருந்து உபரிநீர் அருகிலுள்ள சித்திரைக்குளம் வடக்குத்தெரு, கேசவ பெருமாள் கோயில் தெரு, சோலையப்பன் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களுக்குள் புகுந்துள்ளது.

சித்திரைக் குளத்தில் தண்ணீர் நிரம்பி வெளியேறுவதை கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் இன்று (நவ.11) காலை முதல் குடும்பம் குடும்பமாக வந்து வேடிக்கை பார்த்துச் சென்றனர். கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த பெருமழையில் இக்குளம் நிரம்பிய நிலையில், தற்போது நிரம்பியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கனமழையால் நிரம்பிய சித்திரை குளம்

பெருமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

தமிழ்நாடு முன்னாள் டிஜிபி-யும் மயிலாப்பூரின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர். நட்ராஜ் ஆகியோர் மழைக்காலத்தில் தெருக்கள் வாயிலாக வீணாகும் மழை நீரை அங்குள்ள நான்கு குளங்களுக்கும் கொண்டுசெல்வதற்கான முயற்சிகளை எடுத்தனர். அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

குளத்தை ரசித்த மக்கள்

பெரியகுளம் என்று அழைக்கப்படும் கபாலீஸ்வரர் கோயில் குளத்திலும் தண்ணீர் இல்லாமல் காணப்பட்டது. அதுவும் தற்போது கணிசமான அளவு நிரம்பியுள்ளது.

இதையும் படிங்க:7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ABOUT THE AUTHOR

...view details