விடுதலைப் புலிகளால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு மக்களவையில் பேசியதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து திமுகவுக்கும், டி.ஆர். பாலுவுக்கும் பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.
புலிகளால் சோனியா உயிருக்கு ஆபத்து என்றாரா பாலு - முரசொலி விளக்கம் - டிஆர் பாலு
சென்னை: விடுதலைப் புலிகளால் சோனியா காந்தியின் உயிருக்கு ஆபத்து என்று டி.ஆர். பாலு பேசினாரா என்பது குறித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டி.ஆர். பாலு விவகாரம் குறித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அதில், “கடந்த மே மாதம் 14ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட குறிப்பாணையில் விடுதலைப் புலிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இன்னமும் இருக்கிறது என்று குறிப்பிட்டு அவர்கள் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. மறுபுறம் அச்சுறுத்தல் இல்லை என்று கூறி சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பைக் குறைத்துள்ளது” என்றுதான் டி.ஆர். பாலு பேசியிருக்கிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.