தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொள்ளாச்சி வழியாக விரைவு ரயில் கோரி மனு! - பொள்ளாச்சி எம்பி

பொள்ளாச்சி வழியாக விரைவு ரயில் இயக்கக்கோரி அத்தொகுதியின் மக்களவை உறுப்பினர் சண்முகசுந்தரம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

train
train

By

Published : Oct 23, 2020, 3:45 PM IST

செ‌ன்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள பொது மேலாளர் அலுவலகத்தில், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமசை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.

அதில், பொது முடக்கத்திற்கு முன்பு இயங்கிய கோவை-பொள்ளாச்சி, கோவை-பழனி பயணிகள் ரயில், பழனி-பொள்ளாச்சி வழியாக திருவனந்தபுரம்-மதுரை விரைவு ரயில் மற்றும் பழனி-பொள்ளாச்சி வழியாக சென்னை- பாலக்காடு விரைவு ரயில்களை இயக்க வலியுறுத்தி கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும், பழனி, உடுமலை, பொள்ளாச்சி வழியாக கோவை- சென்னை, கோவை-நாகர்கோவில் புதிய விரைவு ரயில்களை இயக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்'- கோவை துணை ஆட்சியர் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details