தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காங்கிரஸ் தோல்வி ரணகளத்தில் கார்த்திக் சிதம்பரத்தின் கிளுகிளுப்பு ட்வீட்!!! - five state election results 2022

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவிய நிலையில், அக்கட்சியின் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில் கிண்டலடித்துள்ளார்.

mp-karthik-chidambaram-tweet-on-punjab-election-results-2022
mp-karthik-chidambaram-tweet-on-punjab-election-results-2022

By

Published : Mar 10, 2022, 5:21 PM IST

உத்தரப் பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட, பஞ்சாப், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்துவருகிறது. இதில் பஞ்சாபைத் தவிர்த்து, மற்ற மூன்று மாநிலங்களிலும் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

அம்மாநிலத்தில் ஆம் ஆத்மி மிகப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்தியாவின் மிகப் பழமையான தேசிய கட்சியான காங்கிரஸ், தொடர் தோல்விகளால் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் தோல்வி காங்கிரஸ் கட்சியினர், ஆதரவாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அக்கட்சியின் எம்.பி. தனது ட்விட்டர் பதிவில், "இப்போது நெட்பிளிக்ஸில் எதைப் பார்க்க வேண்டும் என்று பரிந்துரை செய்யுங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.ஒருபக்கம் இந்த பதிவுக்கு விமர்சனங்கள் எழுந்துள்ளது. மறுபக்கம் சிலர் இதனை டிரெண்ட் செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க:பஞ்சாப்பில் பட்டையைக் கிளப்பிய பின் கெஜ்ரிவால் ஹனுமார் கோயிலில் வழிபாடு

ABOUT THE AUTHOR

...view details