மதுரவாயலை அடுத்த அடையாளம்பட்டு, பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தாமஸ் (45) தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக வேலை பார்த்து வந்தார். இரவு தூங்கிக்கொண்டிருந்த தாமஸ் இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு திடீரென இறந்து போனார். இதையடுத்து அவரது உடல் உறவினர்களின் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.
தாமஸ் உடலருகே அவரது தாய் காஞ்சனா (70), மற்றும் உறவினர்கள் கதறி அழுது கொண்டிருந்தனர். மகனின் திடீர் இறப்பை சிறிதும் எதிர்பார்க்காத சோகத்தில் தாய் காஞ்சனா அழுது கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கிக் கீழே விழுந்த காஞ்சனா அதே இடத்திலேயே உயிரிழந்தார். இதனைக் கண்ட அவரது உறவினர்கள்கள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.