சென்னை : சென்னையில் டெங்கு, மலேரியா, ஜிகா உள்ளிட்ட வைரஸ் பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்த சென்னை முழுவதும் கொசு ஒழிப்பு மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக காலிமனைகள், தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், தொழிற்சாலைகள், தனியார் அலுவலக கட்டடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், புதிய கட்டுமான இடங்களில் மாநகராட்சி பூச்சி தடுப்புத்துறை பணியாளர்கள் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
ஆய்வின் போது தேவையற்ற இடங்களில் தண்ணீர் தேங்கி அதில் கொசு வளர்வது கண்டறியப்பட்டால் ரூ.100 முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
அதன்படி தனி குடியிருப்புகளுக்கு ரூ.100 முதல் 200 வரையிலும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.500 முதல் 15 ஆயிரம் வரையிலும்,
சிறு குறு கடைகளுக்கு ரூ.500 முதல் 5 ஆயிரம் வரையிலும், உணவகங்களுக்கு ரூ.5000 முதல் 25 ஆயிரம் வரையிலும், பள்ளி கல்லூரிகளுக்கு 10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலும், நட்சத்திர ஓட்டல்கள், தொழிற்சாலைகள், ஐந்தாயிரம் சதுரடிக்கு மேல் உள்ள புதிய கட்டுமானங்களுக்கு ரூ.1 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலும் அபராதம் வசூலிக்கப்படும்.
எனவே சம்பந்தப்பட்ட இடங்களில் கொசு வளராமல் சுத்தமாக பராமரிக்க வேண்டும் எனப் பொதுமக்களுக்கு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொசு உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம்- சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கொசு வளர காரணமாக அமையும் இடங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.100 முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.
Chennai Corporation
இதையும் படிங்க : கொசு உற்பத்தியை தடுக்க ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு