சென்னை:பாம்பன் பகுதியில் 24 மணி நேரத்தில் பெய்த கனமழை காரணமாக, 100 வருடங்களாக பெய்த மழையின் வரலாறு முறியடிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார் .
தமிழ்நாட்டில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதேபோல் டெல்டா மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது. இச்சூழலில் வங்க கடலில் தற்போது மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொடைக்கானலில் காற்றுடன் கூடிய கனமழை!
இவ்வேளையில் ஆகஸ்ட் 8ஆம் தேதி பெய்த மழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பக்கத்தில், இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில் மிகவும் வறட்சியான பகுதி என்றால் அது ராமநாதபுரத்தில் இருக்கும் பாம்பன்தான்.
பாம்பனில் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெய்த மழையின் சராசரி அளவு வெறும் 15 மிமீதான். அதேபோல் தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலும் பாம்பன் பகுதியின் மழையின் சராசரி அளவு 66 மிமீ ஆக மட்டுமே இருந்து வந்துள்ளது.
'இந்த ஆண்டு மோசமாகிக் கொண்டே போகிறது' - வரலட்சுமி சரத்குமார்
ஆனால் நேற்று (ஆகஸ்ட் 8) பாம்பன் - மண்டபம் பகுதியில் மிகவும் புதுமையாக மழை இரவு நேரத்தில் பெய்தது. சில மணி நேரத்தில் 121.88 மிமீ மழை பாம்பன் பகுதியில் பதிவாகியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு பெரிய வரலாற்று மழை பொழிவு அளவை இது முறியடித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.