தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மோடியால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் பழனிசாமி: உதயநிதி ஸ்டாலின் - udhanithi stalin

திருவள்ளூர்: எடப்பாடி பழனிசாமி மோடியால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

nithi

By

Published : Apr 1, 2019, 7:14 PM IST

திருவள்ளூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார் மற்றும் பூவிருந்தவல்லி இடைத்தேர்தலில் போட்டியிடும் கிருஷ்ணசாமி ஆகியோரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ”ஒரு கோடி பேருக்கு ஆண்டுதோறும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று கூறி இதுவரை யாருக்கும் வேலை வழங்கவில்லை.

ஜிஎஸ்டி மூலம் 10 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். மோடி, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூன்றுபேரையும் வீட்டுக்கு அனுப்பவேண்டிய நாள் ஏப்ரல் 18ஆம் தேதி. இந்தியாவுக்கு வில்லன் மோடி. அவருக்கு கைக்கூலிகளாக செயல்படுகிறவர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம். எடப்பாடி பழனிசாமி இரண்டு வருடங்களாக முதலமைச்சர் பதவியில் இருந்ததே அவர் செய்த சாதனை.

சசிகலா காலில் தவழ்ந்துபழனிசாமி முதலமைச்சராக பதவி பெற்றார்.அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் அல்ல மோடியால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர். ஏழைக் குடும்பங்களுக்கு ராகுல் காந்தி நிச்சயம் ஆண்டுதோறும் 72,000 ரூபாய் தருவார்” என வாக்குறுதி அளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details