தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மோடி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - திருமாவளவன் எம்.பி. - விடுதலை சிறுத்தைகள் கட்சி

சென்னை: வேளாண் சட்டங்களை அடாவடித்தனமாக நிறைவேற்றியுள்ள மோடி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

thiruma
thiruma

By

Published : Sep 26, 2020, 2:18 PM IST

விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த திலீபனின் 33ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதன் தலைவர் திருமாவளவன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், " தமிழ் ஈழ விடுதலை களத்தில் அகிம்சை வழியில் உயிர் நீத்த போராளி திலீபன். அவர் எதற்கு பாடுபட்டாரோ அது இன்னும் நிறைவேறவில்லை. சிங்களக் குடியேற்றம் நாள்தோறும் தமிழர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகமும் இதற்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

மனித குலம் நேசிக்கும் மகத்தான ஆளுமை எஸ்.பி. பாலசுப்ரமணியம். தமிழ் மொழிக்கு பெருமையும், மகுடமும் சூட்டியவர். அவரது இழப்பு எக்காலத்திலும், எவராலும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.

வேளாண் சட்டங்களை அடாவடித்தனமாக நிறைவேற்றியுள்ளது மோடி அரசு. குரல் வாக்கெடுப்பு என்ற பெயரால் குரலெழுப்புவதற்கு வாய்ப்பளிக்காமல் மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. இது ஜனநாயக விரோதம். எனவே, குடியரசுத் தலைவர் மோடி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். வேளாண் சட்டங்களை எதிர்த்து 28 ஆம் தேதி மாநிலம் முழுவதும் நடக்கும் போராட்டத்தில், விசிக அனைத்து இடங்களிலும் கலந்து கொள்ளும்.

திமுகவுடனான கூட்டணியில் ஊசலாட்டமோ, குழப்பமோ இல்லை. சாதி, மதவாத சக்திகள் தலைதூக்கிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். எவ்வளவு இடங்கள், மரியாதை என்பதையெல்லாம் முன்னிறுத்தாமல் தேர்தல் உறவை அணுகுகிறோம். திமுக தலைமையிலான கூட்டணியால்தான் சனாதன சக்திகளை முறியடிக்க முடியும் " எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: உலகளவில் இந்தியாவுக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்தியவர் மன்மோகன் சிங் - மு.க. ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details