தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக் காலம் மேலும் 60 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஊரடங்கு உத்தரவினால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இந்த அறிவிப்பு மீன்வர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
அயல்நாட்டு கப்பல்கள் நம் எல்லைக்குள் மீன்பிடிப்பது ஏன்? - கமல்ஹாசன் கேள்வி
சென்னை: பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பது எவ்வகை நீதி என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கமல்
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஊரடங்கில் நிலைகுலைந்த மீனவர்களை, மீன்களின் இனவிருத்திக்கான காரணம் காட்டி மேலும் 60 நாட்கள் தடை விதித்துவிட்டு, இன்று பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பது எவ்வகை நீதி?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.