தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்க! - மனிதநேய மக்கள் கட்சி புகார் - மனிதநேய மக்கள் கட்சி

சென்னை: இஸ்லாமியர்கள் பற்றி அவதூறாகப் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

complaint
complaint

By

Published : Dec 21, 2019, 3:07 PM IST

இது தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் ஹனிஃபா, ”கடந்த 16 ஆம் தேதி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற்ற அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ’ இந்தியாவில் இஸ்லாமியர்கள் குல்லா போட்டு சுதந்திரமாக சுத்த முடிகிறது. அதேபோல் இந்துக்கள் பாகிஸ்தானில் பொட்டு வைத்துக் கொண்டு சுத்த முடியுமா ‘ என்று பேசியுள்ளார். பொறுப்பான அரசுப் பதவியிலிருந்து கொண்டு இரு மதத்திற்கிடையே மோதலை உருவாக்கும் வகையில் அவர் பேசியுள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்க - மனிதநேய மக்கள் கட்சி புகார்

மேலும், பாகிஸ்தான் பிரதமர் பேசுவதைப் போல இங்குள்ளவர்கள் பேசுகிறார்கள் என இந்தியாவின் இறையாண்மையையும் தேசிய ஒருமைப்பாட்டையும் சீர்குலைக்கும் வகையில் பேசியுள்ளார். அமைச்சரின் பேச்சு மத உணர்வையும் இன உணர்வையும் தூண்டும் வகையில் உள்ளது. அது மட்டுமல்லாமல் இந்து - இஸ்லாமியர் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையிலும் உள்ளது. எனவே, அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் “ என்று கூறினார்.

இதையும் படிங்க: 'ராஜேந்திர பாலாஜியை முதலமைச்சர் ஆக்குவோம்' - கைவினைஞர் முன்னேற்றக் கழகத் தலைவர்!

ABOUT THE AUTHOR

...view details