தடைசெய்யப்பட்ட குட்கா போதைப்பொருளை சபாநாயகர் அனுமதி இல்லாமல் சட்டப்பேரவைக்குள் எடுத்துச் சென்றதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிராக, பேரவை உரிமைக்குழு அனுப்பிய இரண்டாவது நோட்டீசையும், சென்னை உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
குட்கா அரசின் ஆட்டம் முடியும்! - மு.க.ஸ்டாலின் டிவிட்!
தங்களுக்கு இரண்டாவது நோட்டீஸ் அனுப்ப காட்டிய வேகத்தை குட்காவை தடுப்பதில் அரசு காட்டியிருக்கலாம் என்றும், குட்கா அரசின் ஆட்டம் முடியப்போகிறது எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
stalin
இதையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில், “குட்கா விற்பனையைச் சுட்டிக்காட்ட பொட்டலங்களை சட்டசபையிலேயே காண்பித்தோம். கமிஷன் வாங்குகிறவர்கள் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள். தடை போட்டது உயர் நீதிமன்றம். 2வது நோட்டீசும் இன்று ரத்து! இந்த வேகத்தை குட்கா தடுப்பில் அரசு காட்டியிருக்கலாமே?! குட்கா அரசின் ஆட்டம் முடியும்!” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இரண்டாவது நோட்டீசும் ரத்து! - உயர் நீதிமன்றம் அதிரடி!