தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மீரா மிதுன் மீது மேலும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

நடிகையும் மாடல் அழகியுமான மீரா மிதுன் மீது எம்.கே.பி நகர் காவல் துறையினர் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மீரா மிதுன்
மீரா மிதுன்

By

Published : Aug 15, 2021, 4:19 PM IST

சென்னை: வியாசர்பாடி எம்.கே.பி நகரைச் சேர்ந்தவர், ஜோ மைக்கல் பிரவீன். இவர் கடந்த 15ஆம் தேதி எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் மீது புகார் ஒன்றை கொடுத்தார்.

நீதிமன்றத்தில் வழக்கு

அதில், 'மீரா மிதுன் சமூக வலைதளப் பக்கங்களில் எனது பெயரையும், புகைப்படத்தையும் தவறாகப் பயன்படுத்தி தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஜோ மைக்கல் பிரவீன், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இது சம்பந்தமாக முறையிட்டு உடனடியாக மீரா மிதுனை கைது செய்ய வேண்டும் என வழக்குத் தொடர்ந்தார்.

இதனையடுத்து எழும்பூர் நீதிமன்றம், மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்ய எம்.கே.பி நகர் காவல் துறையினருக்கு அறிவுறுத்தியது.

போலீஸ் விசாரணை

அதன்பேரில் நேற்று (ஆகஸ்ட் 14) எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் அவதூறு பரப்புதல், சமூக வலைதளங்களை தவறாகப் பயன்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஏற்கெனவே பல மாதங்களுக்கு முன்பு ஜோ மைக்கல் பிரவீன் கொடுத்தப் புகாரின் பேரில், எழும்பூர் காவல் நிலையத்தில் மீரா மிதுன் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது, பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் நேற்று (ஆகஸ்ட் 14) கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது மேலும் பல புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன.

இதையும் படிங்க: நடிகை மீரா மிதுன் கைது

ABOUT THE AUTHOR

...view details