தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'எப்படியும் வெற்றி நமக்குத்தான்' - கருணாநிதி நினைவிடத்திற்கு சென்ற ஸ்டாலின் - திமுக தொண்டர்களின் போஸ்டர்கள்

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவு இன்னும் சில மணி நேரங்களில் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலின் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

mk-stalin-went-to-karunanidhi-memorial-with-his-family
mk-stalin-went-to-karunanidhi-memorial-with-his-family

By

Published : May 2, 2021, 11:01 AM IST

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றுவருகிறது. பெரும்பாலான தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது.

தந்தைக்கு நன்றிக்கடன் ஆற்றிய ஸ்டாலின்

முன்னதாக நேற்று இரவு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார்.

ரிசல்ட் வருவதற்கு முன்பே போஸ்டர்:

ஏற்கனவே ஊரடங்கு காரணமாக வெற்றி கொண்டாட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஆனால் அதையும் மீறி பல இடங்களில் திமுக வெற்றி பெற்றுவிட்டதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

நம்பிக்கை வெளிச்சத்தில் திமுக:

திமுகவிற்கு வெற்றி உறுதி என்றும் மே 6ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்பார் எனவும் திமுகவினர் மகிழ்ச்சி தெரிவித்துவருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் அந்த நம்பிக்கையில் உள்ளார்.

தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி அவர்களின் நம்பிக்கையின் வெளிச்சமாகவே திமுகவும் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details