தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தனது தந்தை மு. கருணாநிதி, திமுக கட்சியின் நிறுவனர் அண்ணா ஆகியோர் சமாதி அமைந்திருக்கும் மெரினா கடற்கரைக்கு மரியாதை செலுத்துவதற்காக புறப்பட்டுச் சென்றார்.
கண்கலங்கிய துர்கா... முதலமைச்சரானார் மு.க. ஸ்டாலின்! - தமிழ்நாடு முதலமைச்சர்
10:44 May 07
அண்ணா, கருணாநிதிக்கு மரியாதை!
10:27 May 07
முதலமைச்சராக கணவர் பதவியேற்பு... கண்கலங்கிய மனைவி!
முதலமைச்சராக முக. ஸ்டாலின் பொறுப்பேற்கையில், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் வடித்தார்.
09:46 May 07
முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்!
திமுக தலைவரும், முதலமைச்சருமான முக ஸ்டாலினின் ட்விட்டர் பக்கத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில் அவர் பெயருக்கு கீழ் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்றும், நான் திராவிடன் என்றும், முகப்புப் படத்தில், ’இனித் தமிழகம் வெல்லும்’ என்ற வார்த்தை அடங்கிய புகைப்படமும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
09:35 May 07
எளிய முறையில் பதவியேற்பு விழா!
கரோனா தொற்றின் காரணமாக ஆளுநர் மாளிகையில் மிகவும் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
09:27 May 07
ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறும் உறுப்பினர்கள்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து அமைச்சரவையில் இடம்பெறும் உறுப்பினர்களும் பதவியேற்று வருகின்றனர். ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் விவரங்கள் அறிய கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்.
08:57 May 07
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்கிறது. ஆளுநர் மாளிகையில் தொடங்கிய இந்த விழாவில் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.