தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முருகப்பா குழுமத்தின் 3 சக்கர மின் வாகனங்கள்... முதலமைச்சர் தொடங்கி வைப்பு... - மின் சரக்கு வாகனங்கள்

முருகப்பா குழுமத்தை சார்ந்த டி.ஐ.க்ளீன் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் "மோன்ட்ரா" எனும் வணிகப் பெயரில் தயாரித்து விற்பனை செய்யவுள்ள 3 சக்கர மின் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 29, 2022, 12:37 PM IST

சென்னை:தலைமைச் செயலகத்தில் முருகப்பா குழுமத்தை சார்ந்த “டி.ஐ. க்ளீன் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் (TI Clean Mobility Pvt Ltd) நிறுவனம் “மோன்ட்ரா” (Montra) எனும் வணிகப் பெயரில் தயாரித்து விற்பனை செய்யவுள்ள 3 சக்கர மின் வாகனங்களை இன்று (ஆக.29) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்தியாவிலேயே, சைக்கிள் உற்பத்தியில் முன்னோடியாகத் திகழும் இந்நிறுவனம், டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் (TII), நூறு ஆண்டுகளுக்கு மேல் இயங்கும் பழம்பெரும் நிறுவனமான முருகப்பா குழுமத்தின் ஒரு அங்கமாகும். இதன் மற்றுமொரு நிறுவனமான, TI Clean Mobility Private Limited, பயணிகளுக்கான மின் ஆட்டோக்கள், மின் சரக்கு வாகனங்கள் மற்றும் E-Rick போன்ற சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத மின் வாகனங்களைத் தயாரிக்க திட்டமிட்டு இருந்தன.

TI குழுமம், அம்பத்தூரில் உள்ள தனது TI Cycles வளாகத்தில், ரூ.140 கோடி முதலீட்டில், 580 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், மூன்று சக்கர மின் வாகனங்கள் உற்பத்தி செய்வதற்காக, 20.7.2021 அன்று தொழில் துறை சார்பில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி (GUIDANCE) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

அதன் அடிப்படையில், TI Clean Mobility Pvt. Ltd., நிறுவனத்தின் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத மோன்ட்ரா (Montra) எனும் வணிகப்பெயரிடப்பட்ட மூன்று சக்கர மின் வாகனங்கள் உற்பத்தியை மேற்கொண்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட ஒரு வருட காலத்திலேயே இந்த உற்பத்தித் திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியாவில் சுசூகியின் வெற்றி இரு நாடுகளுக்கு இடையேயான வலுவான கூட்டுறவைக் குறிக்கிறது

ABOUT THE AUTHOR

...view details