தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திமுக தெற்கு மண்டல நிர்வாகிகளுடன் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

சென்னை: தேர்தல் பணிகள் குறித்து தெற்கு மண்டல நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று(அக்.23) ஆலோசனை நடத்தவுள்ளார்.

stalin
stalin

By

Published : Oct 23, 2020, 9:03 AM IST

சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதையொட்டி அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியினரைத் தயார் படுத்தும் பணியில் மும்முரமாகியுள்ளன. அந்தவரிசையில், திமுகவில் அக்கட்சியின் சார்பில் மாவட்டந்தோறும் முப்பெரும் விழா நடத்தப்பட்டு, காணொளி மூலம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றி வருகிறார்.

அப்போது ஆளும் அதிமுக அரசுக்கு எதிராகவும், மத்திய அரசின் விரோத போக்குகள் குறித்தும் தொண்டர்களுக்கு எடுத்துரைத்து வருகிறார். மேலும், ஆறு மாதங்களில் திமுக ஆட்சிக்கு வரும் என்றும், அதற்கான பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என, தனது கட்சித் தொண்டர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர் பேசி வருகிறார்.

இதனிடையே, மண்டல வாரியாக திமுக நிர்வாகிகளை சந்தித்து வரும் மு.க.ஸ்டாலின், தேர்தலுக்கு எவ்வாறு ஆயத்தமாவது, பரப்புரைக்கான யுக்திகள் என்ன என்பது குறித்து மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு அறிவுறுத்தி வருகிறார். அந்த வகையில், அண்ணா அறிவாலயத்தில் இன்று(அக்.23) காலை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

நேற்று முந்நாள்(அக்.21), மேற்கு மண்டலங்களான கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் ஆகிய ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல், வரும் 27 ஆம் தேதி கிழக்கு மண்டல நிர்வாகிகளுடனும், 28 ஆம் தேதி வடக்கு மண்டல நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடைபெற உள்ளதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மாணவர்களுக்குத் துரோகம் செய்யும் அதிமுக; மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் - மு.க.ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details