சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ”முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட இதுக்கீடு தந்து, மருத்துவ மாணவராகவும், அதிகமான மருத்துவக் கல்லூரிகளை திறந்து மருத்துவராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து ஏழை விவசாயியாகவும், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவித்து, தேர்வு எழுதி காத்திருக்கும் மாணவனாகவும், குடி மராமத்து பணிகளை மேற்கொண்டு, சாதாரண குடிமகன் அவதாரமும், அதேபோல கரோனா காலகட்டத்தில் முன்களப் பணியாளராக அவதாரம் எடுத்தும், மேலும், மருத்துவத்துறையில் மகப்பேறு திட்டத்தை செயல்படுத்தி ஒரு தாயாகவும் அவதாரம் எடுத்துள்ளார்.