சென்னை: வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைத்தல், கல்லணை கால்வாய் புதுப்பிக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் மோடி பிப்ரவரி 14ஆம் தேதி சென்னை வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி வருகை - நேரு அரங்கை ஆய்வு செய்த அமைச்சர்கள்! - நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆய்வு
பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பிரதமர் மோடி பிப்ரவரி 14ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்கிறார்.
சென்னையில் 6 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். விமான நிலையம், நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் 4 அடுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது. மேலும் ஐஎன்எஸ் அடையாறு கப்பல் படைத்தளத்திலிருந்து நேரு நேரு உள் விளையாட்டு அரங்கம் வரை தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.