அன்றாடம் உணவில் சேர்க்கப்படும் வெங்காயம் ஒரு அத்தியாவசிய சமையல் பொருளாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்த வெங்காயத்தின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து காணப்படுகிறது. காரணம் இந்தியாவில் அதிகமாக வெங்காயம் உற்பத்தி செய்யப்படும் மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழையால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் வெங்காயத்தின் இறக்குமதி குறைந்ததையடுத்து, கடந்த ஒரு வார காலமாக வெங்காயத்தின் விலை அதிகரித்தே காணப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெங்காயம் 50 ரூபாய்க்கு மேல் விற்பனை ஆவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இது பண்டிகை காலம் என்பதால் நடுத்தர வர்க்கத்தினர் அவதி அடைந்துள்ளனர்.