சென்னை:சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின் போது பேசிய ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ., செல்வபெருந்தகை ஸ்ரீபெரும்புதூர் ஜங்ஷன் பகுதியில் பாலம் கட்டும் திட்டம் எந்த அளவில் உள்ளது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு,‘ஸ்ரீபெரும்புதூர் சந்திப்பில் உள்ள சாலை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு சொந்தமான சாலை என்றும், ஒன்றிய அரசிடம் அனுமதி பெற்று தான் பாலம் கட்ட முடியும் எனவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறினார்.
பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் பாலம் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்: அமைச்சர் ஏ வ வேலு - பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு
பூந்தமல்லி முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை உயர்மட்ட பாலம் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் பாலம் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்: அமைச்சர் ஏ வ வேலு
மேலும் சமீபத்தில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின், பூந்தமல்லியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை உயர்மட்ட சாலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க:காவல்துறைக்கு முழு சுதந்திரம்- சேகர் பாபு!