சென்னை:தி.நகரில் உள்ள தியாகராய அரங்கில், 2021-22ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் ஊக்கம் அளிக்கும் வகையில் "ஜெயித்துக்காட்டுவோம் வா" என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நடிகர் ஆர்.ஜெ. பாலாஜி, ஆன்மிகப் பேச்சாளர் சுகி சிவம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், "நீட் தேர்வு எழுதியவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக "ஜெயித்துக்காட்டுவோம் வா" என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நீட் எழுதிய ஒரு லட்சத்து 10ஆயிரத்து 971 லட்சம் பேருக்குத் தொடர்ந்து ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
நீட்டுக்கு எதிராக தீர்மானம்
இதில், 200 மாணவர்களுக்குத் தொடர் மன அழுத்தம் இருப்பதால் அவர்களுக்கு மீண்டும் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி கல்வி தொலைக்காட்சியில் நாளை (அக்.10), நாளை மறுநாள் (அக்.11) 3 மணி முதல் 5 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படும். நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் இந்நிகழ்ச்சி தொலைபேசி வாயிலாக அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.