மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்தும் நிகழ்ச்சிகளுடன் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அலுவலர்களைக் கொண்டு மாணவர்களின் வாழ்வில் வெற்றி பெறும் வழிமுறைகள் குறித்து கல்வித் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்தப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்வி தொலைக்காட்சியையும், நாளை நடைபெற உள்ள கல்வி தொலைக்காட்சிக்கான முன்னேற்பாடு பணிகளையும் அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்து வருகிறார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்வி தொலைக்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடக்கி வைக்க இருக்கிறார். பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் நடைபெறும் திறப்புவிழா நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்கிறார்.