சென்னை: செளகார்பேட்டையில் தனியார் அறக்கட்டளை சார்பாக அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 35 படுக்கைகள், ஐந்து சாதாரண படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக இந்து அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு திறந்து வைத்தார்.
'ஊரடங்கு விதிகளை கடைப்பிடியுங்கள்' - அமைச்சர் சேகர்பாபு - Sekarbapu who opened the Corona treatment center
ஊரடங்கு விதிகளை முறையாக கடைப்பிடித்து கரோனா தொற்று பரவலை தடுக்க அரசுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குங்கள் என்று அமைச்சர் சேகர்பாபு கேட்டுக்கொண்டுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தனியார் அறக்கட்டளை சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக 35 ஆக்ஸிஜன் வசதி, ஐந்து சாதாரண படுக்கை வசதி கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தேன். இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளின் முழு மருத்துவ செலவுகளை இந்த அறக்கட்டளையே ஏற்றுக்கொள்ளும்.
இதுபோன்ற மருத்துவமனைகள் தொடங்க தன்னார்வலர்கள் முன் வர வேண்டும். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும். இந்த மருத்துவமனை நாளை முதல் முழு வீச்சில் செயல்படும் மேலும் ஊரடங்கு விதிகளை முழுமையாக கடைபிடித்து கரோனா தொற்று பரவலை தடுக்கு அனைவரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்" எனத் தெரிவித்தார்.