தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'நெல் கொள்முதல்; ஆன்லைன் பதிவு குறித்து அச்சப்படத் தேவையில்லை'

நேரடி கொள்முதல் நிலயங்களில் நெல் கொள்முதல் செய்வது தொடர்பாக ஆன்லைன் பதிவு குறித்த ஒன்றிய அரசின் உத்தரவு பற்றி உழவர் அச்சப்படத் தேவையில்லை என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

அர. சக்கரபாணி
அர. சக்கரபாணி

By

Published : Oct 6, 2021, 2:19 PM IST

சென்னை:இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அறுவடை காலம் என்பதை கருத்தில் கொண்டு, நேரடி கொள்முதல் நிலையங்களில் உழவருக்கு எவ்வித இடையூறும் இன்றி நெல் கொள்முதல் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள்.

ஆகையால், ஆன்லைன் பதிவு குறித்த ஒன்றிய அரசின் உத்தரவு பற்றி உழவர் அச்சப்படத் தேவையில்லை" எனப் பதிவிட்டுள்ளார்.

ஆன்லைன் பதிவு நடைமுறை இந்த ஆண்டு பின்பற்றப்படுமா? இல்லை, பழைய நடைமுறையே பின்பற்றப்படுமா? என்பதை அமைச்சர் உறுதிப்படுத்தினால் உழவர் மத்தியில் அச்சம் குறையும் என்ற வாதமும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் 😱

ABOUT THE AUTHOR

...view details