சென்னை:ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று (ஜூன் 25) 'பாடறிவோம் படிப்பறிவோம்' மற்றும் 'துளிர் அமைப்பு' ஆகியவை இணைந்து பாடல் நிகழ்ச்சி நடத்தின. இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், பாடலில் ஆர்வம் கொண்ட மற்றும் பட்டியலின மாணவி சீதாவுக்கு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் விருது வழங்கினார். பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ், "வாய்ப்பு இல்லாதவர்களுக்கு வாய்ப்புகளை அளிக்கும் விதமாக இந்த அமைப்பினர் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.
துளிர் அமைப்பு மற்றும் பாடறிவோம் படிப்பறிவோம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய கலை நிகழ்ச்சி பழங்குடியின மக்களை பொறுத்தவரை மொழி, கலச்சாரம், பாரம்பரியம் போன்றவை தனியாக இருக்கிறது. குறிப்பாக பழங்குடியின மக்கள் கல்வியிலும், வேலைவாய்பிலும் முன்னேற வேண்டும் என்பதற்காக இந்த ஆதிதிராவிட நலத்துறை உருவாக்கப்பட்டது. அவர்களுடைய திறன் மேம்பாடு வளர்வதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம்.
கல்வி பெறாதவர்களும் அவர்களுடைய வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம். பட்டியலின மாணவி சீதாவை இந்த அமைப்பினர்தான் என்னிடம் கொண்டு வந்து சேர்த்தனர். பழங்குடியின மக்களுக்கு அரசு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பஞ்சமி நிலம் குறித்து சட்டம் இயற்றும் நடவடிக்கைகள் ஆய்வு நிலையில் உள்ளன - அமைச்சர் கயல்விழி செல்வராஜ்