இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதிமுகவை விமர்சித்து துக்ளக்கில் கார்ட்டூன் வரையப்பட்டுள்ளது. அதற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். துக்ளக் ஆசிரியர் அடக்கி வாசிக்க வேண்டும். அவர் கூறும் கார்ட்டூன் பாஜக அமைச்சர்களையும் குறிப்பதாக உள்ளது.
'துக்ளக் ஆசிரியர் அடக்கி வாசிக்க வேண்டும்..!' - ஜெயக்குமார் ஆவேசம் - minister jayakumar
சென்னை: துக்ளக் ஆசிரியர் அடக்கி வாசிக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
jayakumar
துக்ளக் பத்திரிகை ஆசிரியர் அதிமுக மீது ஏன் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறார் என்று தெரியவில்லை. பத்திரிகை ஆசிரியர் என்றால் வரையறை உள்ளது. நாங்கள் விமர்சனம் செய்தால் தாங்க மாட்டார்கள். இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.
Last Updated : Jun 7, 2019, 5:21 PM IST