தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சசிகலா, டிடிவி-க்கும் அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார் - அமைச்சர் ஜெயக்குமார் செய்திகள்

சென்னை: சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கும் அதிமுகவிற்கும், இரட்டை இலை சின்னத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சசிகலா, டிடிவி-க்கும் அதிமுகவிற்கும்எந்த சம்பந்தமும் இல்லை -அமைச்சர் ஜெயக்குமார்
சசிகலா, டிடிவி-க்கும் அதிமுகவிற்கும்எந்த சம்பந்தமும் இல்லை -அமைச்சர் ஜெயக்குமார்

By

Published : Feb 18, 2021, 5:21 PM IST

சிந்தனை சிற்பி ம. சிங்காரவேலர் 162ஆவது பிறந்தநாளையொட்டி இன்று (பிப். 18) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள அவரது உருவ சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்ட உருவப்படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், பென்ஜமின், பாண்டியராஜன், மாவட்ட ஆட்சியர் ஆர். சீத்தாலெட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் டி. ஜெயக்குமார் பேசுகையில், “புதுச்சேரி விவகாரம் அந்த மாநிலம் சம்பந்தப்பட்டது. நிர்வாகம் சம்பந்தமாக மத்திய அரசு ஆளுநரை நியமித்து இருக்கிறது. ஆளுநர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். தற்போது இருக்கிற அமைச்சர் சபை மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டுவருவதாக பத்திரிகையில் நான் படித்தேன். அதுகுறித்து அந்த மாநில அரசு முடிவு செய்யும்.

எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த பிறகு முதல்முறையாக ஆட்சியை பிடித்த மாநிலம் புதுச்சேரி. புதுச்சேரியில் தற்போது நிலையை பார்க்கும் போது மக்களுக்கு நிச்சயமாக தெரிகிறது. விரைவில் புதுச்சேரியில் மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிக்கும். அங்கு அதிமுக கொடி பறக்கும். நம்பிக்கை வாக்கெடுப்பு எடுத்தால் ஆட்சிக்கு எதிராக அதிமுக வாக்களிக்கும்” என்றார்.

மேலும், “சசிகலா, டிடிவி தினகரன் ஆகோயோருக்கும் அதிமுகவிற்கும், இரட்டை இலை சின்னத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உச்ச நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கிவிட்டது. போகிறவர்கள், வருகிறவர்கள் எல்லாம் வழக்கு போட்டால் அதற்கெல்லாம் பொறுப்பாக முடியாது. உச்ச நீதிமன்றம் தீர்ப்புதான் என்றும் நிரந்தரம். அதுதான் எப்போதும் செல்லுபடியாகும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...தமிழில் பதவி ஏற்ற முதல் தமிழச்சி: தமிழிசை 'கை'யில் புதுச்சேரி!

ABOUT THE AUTHOR

...view details