தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நல்லாட்சிக் குறியீட்டில் தமிழகம் முதலிடம்! - அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதம்

சென்னை: சட்டம் ஒழுங்கு, பொதுமக்கள் பாதுகாப்பு உள்ளிட்டவைகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

assembly
assembly

By

Published : Dec 26, 2019, 5:15 PM IST

நல்லாட்சிக் குறியீட்டில் தமிழகம் முதலிடம் பெற்றிருப்பதைத் தொடர்ந்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ”மத்திய அரசு சார்பில் 18 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில் சட்டம் ஒழுங்கு, பொதுமக்கள் பாதுகாப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் நம் தமிழகம்தான் முதலிடம் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இந்த ஆண்டின் பரிசாக நமக்குக் கிடைத்துள்ளது. 2021 தேர்தலைச் சந்திக்கும் போதும் சரி, அதற்குப் பிறகும் சரி, இதே நிலைதான் தொடரும்.

சட்டம் ஒழுங்கு பற்றி இனி ஸ்டாலின் பேசக்கூடாது - அமைச்சர் ஜெயக்குமார்

பல்வேறு துறைகளில் 100க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. வேளாண் துறையில் தற்போது 9ஆவது இடத்தில் இருந்தாலும், விரைவில் முதலிடம் பிடிப்போம். உள்ளாட்சி, காவல்துறை, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் விருதுகளை வாங்கி குவித்திருக்கிறது தமிழக அரசு. எனவே, இனி சட்டம் ஒழுங்கு பற்றி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசக்கூடாது ” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஈவேராவை ‘பெரியார்’ ஆக்கிய அன்னை மீனாம்பாள்!

ABOUT THE AUTHOR

...view details