அதிமுக சார்பில் கொத்தவால் சாவடி துறைமுகம் பகுதியில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “ஒவ்வொரு கட்சியும் தீர்மானம் போடும் போது சில ’பில்டப்’ களை கொடுப்பது வழக்கம்தான். அதுபோலத்தான் திமுக பொதுக்குழுவிலும் மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்குவோம், எட்டு மாதங்களில் ஆட்சி மாறும் என்றும் கூறியிருக்கின்றனர்.
ஆனால், மக்களின் எண்ணம் 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும், அதிமுக ஆட்சியே அமைய வேண்டும் என்பதுதான். எதிர்க்கட்சி என்றால் நாங்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டலாம். செய்யும் எல்லாவற்றையும் குறை கூறக்கூடாது. நிதி, தன்னாட்சி குறித்து பேசக்கூடிய ஸ்டாலின், திமுக ஆட்சியின்போது எவ்வளவு நிதியை மத்திய அரசிடம் கேட்டுப் பெற்றார்.