தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மானியத்துடன் மீன் வளர்க்க சிறப்புத் திட்டங்கள் - அமைச்சர் ஜெயக்குமார் - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: சிறப்பு மானியத்துடன் மீன் வளர்த்தல், மீன் விதை வங்கிகள் உருவாக்குதல், நவீன மீன் விற்பனை அங்காடி அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள மத்திய - மாநில அரசு திட்டங்களில் இணைந்து பயன்பெறுமாறு மீனவர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

department
department

By

Published : Aug 28, 2020, 11:31 AM IST

இது தொடர்பாக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தேசிய வேளாண்மை அபிவிருத்தித்திட்டம், 2020-21 இன் கீழ் 5.21 கோடி ரூபாய் மதிப்பில் நீர்ப்பாசன குளங்கள், மிதவைக் கூண்டுகளில் மீன் வளர்த்தல், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறைக்குச் சொந்தமான குளங்களில் மீன் விரலிகள் முப்பு செய்தல் மற்றும் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்களுக்கு உள்ளீட்டு மானியம் வழங்குதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அதேபோல், தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டம், 2020-21 இன் கீழ் 12.42 கோடி ரூபாய் மதிப்பில் பாசன குளங்களில் மீன் விரலிகள் இருப்பு செய்தல், பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்ப்பு, மிதவை கூண்டுகளில் மீன் வளர்த்தல், மீன் வளர்ப்பு பண்ணை அமைத்தல், நவீன மீன் விற்பனை அங்காடி அமைத்தல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மத்திய அரசு, பிரதம மந்திரி மத்சிய சம்பட யோஜனா (PMKSY), 2020-21 திட்டத்தின் கீழ் உள்நாட்டு மீனவர்களுக்கு புதிய மீன் வளர்ப்பு பண்ணை அமைத்தல், மீன் குஞ்சு பொரிப்பகங்கள் அமைத்தல், மீன் குஞ்சு வளர்த்தெடுக்கும் பண்ணைகள் அமைத்தல், உள்ளீட்டு மானியம், மீன் விதைப் பண்ணை அமைத்தல், நீரினை மறுசுழற்சி முறையில் மீன் வளர்ப்பு மற்றும் உயிர்கூழ்மம் (Biofloc) முறையில் மீன் வளர்ப்பு ஆகிய தொழில்நுட்பத்துடன் அதிக வருமானம் ஈட்டக்கூடிய மீன்வளத் திட்டங்களை அறிவித்துள்ளது " எனத் தெரிவித்துள்ளார்.

இத்திட்டங்களின் கீழ் மீன் வளர்ப்பு மேற்கொள்ள பொதுப் பிரிவினருக்கு 40% மற்றும் மகளிர் / ஆதிதிராவிடர் / பழங்குடியினர் பிரிவினருக்கு 60% மானியம் வழங்கப்படும் என்றும், இத்திட்டங்களில் சேர விரும்பும் மீன்வளர்ப்போர், அந்தந்த மாவட்ட மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகங்களைத் தொடர்புகொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அடுத்த மாதம் முதல் நடமாடும் ரேஷன் கடைகள் - அமைச்சர் செல்லூர் ராஜு

ABOUT THE AUTHOR

...view details