சென்னை:செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியில் உள்ள நியாயவிலைக் கடை முடிச்சூர் கிராமத்தில் கடந்த 25ஆம் தேதி இரவு சட்டவிரோதமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொது விநியோகத் திட்ட அரிசியை வேனில் கடத்த முயன்றுள்ளனர்.
அப்போது, குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்களால் ஏ. கோமதி, விற்பனையாளர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
அரிசி கடத்தல்
கடத்தப்படவிருந்த நியாயவிலைக் கடை அரிசி பறிமுதல்செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை (FIR Number 21/2022) பதியப்பட்டது. இதனை அடுத்து ஏ. கோமதி, விற்பனையாளர், பண்டக சாலை நிர்வாகத்தால் உடன் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பொது விநியோகத் திட்டத்தின்கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள், கட்டுநர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு, தகுதியான அளவில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை முறையாக விநியோகம் செய்யக் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் எச்சரிக்கை
நியாயவிலைக் கடைப் பணியாளர்கள், அரிசி கடத்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது குற்ற வழக்கு தொடரப்படும், தொடர்புடைய பணியாளர்களைப் பணிநீக்கம் போன்ற கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஐ. பெரியசாமியின் அறிக்கை மூலம் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
இதையும் படிங்க: Economic Survey 2021-22: நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.5 விழுக்காடு ஆக உயரும்!