சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவைகளை விரைவில் நிறைவேற்றுவது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
148 மாணவர்களுக்கு கரோனா - அமைச்சர் அன்பில் மகேஷ் - மகேஷ் பொய்யாமொழி
சென்னை: மாணவர்கள் 148 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
அன்பில் மகேஷ்
அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ அடுத்த கூட்டத் தொடரில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினாலும் பதில் கூற முடியும். முதலமைச்சரை சந்தித்து பள்ளிகள் திறப்பது குறித்து அறிக்கை அளித்துள்ளோம்.
பொது சுகாதாரத்துறை கருத்து கேட்டு கூறுவதாக தெரிவித்துள்ளனர். மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் மாணவர்களை வருவதற்கு கட்டாயப்படுத்த கூடாது. மாணவர்கள் 148 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.