தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

புலம்பெயர் தொழிலாளர்களுடன் சென்னையிலிருந்து புறப்பட்டது முதல் ரயில்!

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 1038 தொழிலாளர்கள் ஷ்ராமிக் சிறப்பு ரயில் மூலம் ஜெகநாத்பூருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

By

Published : May 9, 2020, 10:41 PM IST

Migrant workers were sent to their hometowns
Migrant workers were sent to their hometowns

கரோனா வைரஸ் பரவல் காரணமாக, தமிழ்நாட்டில் சிக்கியிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளிகளை ஷ்ராமிக் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பும் பணி நடைபெற்றுவருகிறது.

சென்னையில் இருந்து முதற்கட்டமாக, சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஒடிசா மாநிலம் ஜெகநாத்பூர் ரயில் நிலையத்திற்கு, 1,038 தொழிலாளர்களுடன் சிறப்பு ரயில் (மே.9) இரவு 10 மணிக்கு புறப்பட்டது. தொழிலாளர்களுக்கு வழிநெடுகத் தேவையான உணவு, தண்ணீர் பாட்டில்கள், பிரெட் பாக்கெட்டுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

புலம்பெயர் தொழிலாளர்களுடன் சென்னையில் இருந்து புறப்பட்ட முதல் ரயில்!
ரயில் ஏற வரும் தொழிலாளர்களுக்கு, உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தொழிலாளர்களை ஒழுங்குப்படுத்த ஏராளமான ரயில்வே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவர்களுக்கு உதவியாக தமிழ்நாடு காவல் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

சொந்த ஊர் புறப்பட்டு செல்ல சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த ஒடிசா மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களுடன் கொண்டு வந்த உடமைகளில் சுகாதாரப் பணியாளர்கள் கிருமிநாசினி அடித்தனர்.

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவேக் முகாம்களில் தங்கியிருந்த தொழிலாளர்கள், சென்னை மாநகராட்சி மூலமாக சிறப்பு பேருந்துகளில் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குத் தனியாக அழைத்து வரப்பட்டனர். புலம் பெயர் தொழிலாளர்களை வழியனுப்பும் பணியை ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு பார்வையிட்டார்.

கரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக சென்னை மாறியுள்ளதால், ரயில் நிலைய வளாகத்துக்குள் பணிபுரிந்த ஊழியர்கள், காவல்துறையினர், சொந்த ஊர் செல்ல வந்த தொழிலாளர்கள் என அனைவரும் முகக்கவசம், கையுறை போன்ற முன்னெச்சரிக்கை உபகரணங்களை அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கொத்தடிமைகளாய் மீட்கப்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள்- சொந்த மாநிலம் செல்ல கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details