தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கையூட்டு பெறுவதாகத் தொடரப்பட்ட வழக்கு அபராதத்துடன் தள்ளுபடி!

அரசு அலுவலகங்களில் கையூட்டுப் பெறுவதாக எந்த ஆதாரமும் இல்லாமல் தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடிசெய்த உயர் நீதிமன்றம், மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், இரண்டு ஆண்டுகள் வழக்குத் தொடர தடைவிதித்தும் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

By

Published : Feb 2, 2022, 2:05 PM IST

சென்னை:மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். அதில், தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் கையூட்டு அதிகரித்துவருகிறது.

பிறப்பு முதல் இறப்பு வரை சான்றிதழ்கள் பெற கையூட்டு கொடுக்க வேண்டி உள்ளதாகவும், அனைத்து அலுவலகங்களிலும் கையூட்டு வழங்கக் கூடாது என அறிவிப்புப் பலகையைக் கட்டாயம் வைக்க வேண்டும். அனைத்து அலுவலகங்களிலும் சிசிடிவி பொருத்தி உயர் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என வழக்குத் தொடர்ந்துள்ளார்.

மனுதாரருக்கு அபராதம்

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் எந்த ஆதாரமும் இல்லாமல், விளம்பரத்திற்காக மட்டுமே இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

அதனால், விளம்பரத்திற்காக வழக்குத் தொடர்ந்துள்ள மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பொதுநல வழக்குத் தாக்கல்செய்ய தடைவிதித்து வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: ஜெயலலிதா பிறந்தநாளன்று அஜித்தின் 'வலிமை' திரையரங்குகளில்...

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details