மெட்ரோ நிர்வாகத்திற்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி எட்டு மெட்ரோ ஊழியர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து நேற்று முதல் கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ தலைமை அலுவலகத்தில் 250-க்கும் மேற்பட்ட மெட்ரோ ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம்: பேச்சுவார்த்தை தொடங்கியது - metro
சென்னை: தொழிலாளர் நலத் துறை உதவி ஆணையர் ஜானகிராமனுடன் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அலுவலர்கள், மெட்ரோ ரயில் பணி ஊழியர்கள் இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.
மெட்ரோ
இந்நிலையில் இன்று பாரிமுனையில் தொழிலாளர் நலத் துறை உதவி ஆணையர் ஜானகிராமனுடன், மெட்ரோ நிர்வாக அலுவலர்களும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தரப்பினரும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர். மெட்ரோ ஊழியர்கள் சார்பில் சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.