தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், வரும் எட்டாம் தேதி மத்திய மேற்கு வங்கக் கடலின் கிழக்கு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்? - வானிலை ஆய்வு மையம்
சென்னை: மத்திய மேற்கு வங்கக் கடலின் கிழக்கு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
chennai
மேலும், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் என்பதால் இன்று மற்றும் நாளை, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆழியாறு அணையை திறக்க முதலமைச்சர் ஆணை!