இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அப்பேரவையின் நிர்வாகிகள், ”கோயம்பேட்டில் மொத்த மற்றும் சிறு குறு வியாபாரிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வியாபாரம் செய்துவந்த நிலையில், திருமழிசையில் 200 மொத்த வியாபாரிகள் மட்டும் தற்காலிக கடைகளைத் திறந்து வியாபாரம் செய்தனர்.
இதனால் மற்ற சிறு, குறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, மற்ற கடைகளுக்குச் சென்று மூட்டை தூக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கோயம்பேட்டிலிருந்து வெளியே செல்ல மறுத்து வியாபாரிகள் போராடிவந்த நிலையில், வணிகர் சங்கப் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தூண்டுதலின்பேரிலேயே திருமழிசைக்கு பெரு வியாபாரிகள் சென்றனர். அவர்களிடமிருந்து விக்கிரமராஜா பெரும் தொகையை பெற்றுக்கொண்டு திருமழிசையில் கடை அமைத்து கொடுத்துள்ளார்.