தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தீயணைப்பு பணியின் போது இறந்த வீரர்கள் : நீத்தார் நினைவு தினம் அனுசரிப்பு

தீயணைப்பு பணியின் போது இறந்த, தீயணைப்பு துறை வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில், நீத்தார் நினைவு தினம் இன்று (ஏப்.14) அனுசரிக்கப்பட்டது.

தீயணைப்பு துறையினரின் நீத்தார் நினைவு தினம், DGP SAILENDRABABU, நீத்தார் நினைவு தினம்
தீயணைப்பு துறையினரின் நீத்தார் நினைவு தினம், DGP SAILENDRABABU, நீத்தார் நினைவு தினம்

By

Published : Apr 14, 2021, 9:15 PM IST

தமிழ்நாடு முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களில், 'தீ தொண்டு தினம்' என நீத்தார் நினைவு தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 14ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று தீயணைப்பு துறையினர் நீத்தார் நினைவு நாளையொட்டி, தாம்பரம் தீயணைப்பு பயிற்சி பள்ளி வளாகத்தில் தீயணைப்பு துறை இயக்குநர் டி.ஜி.பி சைலேந்திரபாபு உள்ளிட்ட அலுவலர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தினர்.

தீயணைப்பு பணியின் போது இறந்த வீரர்கள் : நீத்தார் நினைவு தினம் அனுசரிப்பு

இதேபோல், திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்தில் இன்று காலை 8 மணியளவில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் கே.முரளி தீயணைப்பு படையினர் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதில் நிலைய அலுவலர் கோபால்,கமால்பாபு மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையும் படிங்க:அம்பேத்கருக்கு தாக்கரே மலரஞ்சலி!

ABOUT THE AUTHOR

...view details