அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய 300-க்கும் மேற்பட்டோர் பாஜகவில் தங்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது.
பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன், தமிழ்நாட்டுக்கான இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் உள்ளிட்டோர் முன்னிலையில் மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகிய 300-க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்.
பின்னர் மேடையில் பேசிய எல். முருகன், பிரதமர் மோடி தலைமையிலான அரசின் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் மாநிலம் முழுவதும் பாஜகவில் இணைந்துவருவதாகவும், தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி எண்ணற்ற திட்டங்களைக் கொண்டுவந்துள்ளதாகவும் கூறினார்.
முத்ரா, இலவச எரிவாயு, கிசான் போன்ற திட்டங்களால் அதிகம் பயனடைந்திருக்கும் மாநிலம் தமிழ்நாடுதான் என்று பேசிய எல். முருகன், இந்த உண்மைகளை மறைத்து மக்களை ஏமாற்றும்விதமாக ஸ்டாலின் பொய் சொல்லி வருவதாகவும் தெரிவித்தார்.
'பிரதமரின் திட்டங்களால் அதிகம் பயனடைந்த மாநிலம் தமிழ்நாடு!' - PM Modi's Successful Plan
சென்னை: முத்ரா, இலவச எரிவாயு, வேளாண்மை நிதி உதவித் திட்டம் (கிசான்) போன்ற பிரதமரின் திட்டங்களால் அதிகம் பயனடைந்திருக்கும் மாநிலம் தமிழ்நாடுதான் எனப் பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தெரிவித்தார்.
murugan