தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’நாடு பாசிச ஆக்டோபஸ் கரங்களால் நெறிக்கப்படுகிறது’ - வைகோ - வைகோ

சென்னை: மத்திய நிதி அமைச்சரின் ஊக்க அறிவிப்புகளில் வேலை வாய்ப்பை இழந்துள்ள தொழிலாளர்களுக்கு நேரடியாகப் பணப்பயன் அளிக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

vaiko
vaiko

By

Published : May 18, 2020, 4:37 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊரடங்கால் முடங்கியுள்ள இந்தியப் பொருளாதாரத்தை மீட்பதற்கு ‘சுயசார்பு பொருளாதாரத் திட்டம்’ எனும் பெயரில் மோடி அரசால் ரூ.20 லட்சம் கோடிக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கரோனா பேரிடரால் வாழ்விழந்து தவிக்கும் கோடானகோடி ஏழை எளிய மக்கள், குடிபெயர்ந்த தொழிலாளர்கள், 45 கோடிக்கும் அதிகமான அமைப்பு சாரா தொழிலாளர்கள், வேலை வாய்ப்பை இழந்துள்ள 9 கோடி பிற தொழிலாளர்களுக்கு நேரடியாகப் பணப்பயன் அளிக்கும் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

கரோனா நெருக்கடி காலத்தில் பா.ஜ.க. அரசு மாநில உரிமைகள் அனைத்தையும் தட்டிப் பறித்துக்கொண்டு, எல்லா அதிகாரங்களும் எங்களுக்கு என்னும் எதேச்சதிகாரமான ஆணவ தர்பாரை நடத்திக்கொண்டிருக்கிறது. மாநிலங்களுக்கான வரிப் பங்கீடு 46,038 கோடி, வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.12,390 கோடி, தேசியப் பேரிடர் நிவாரண நிதி ரூ.11,092 கோடி மாநிலங்களுக்கு வழங்கி இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் கூறி இருப்பது யானைப் பசிக்குச் சோளப் பொரியாகும்.

மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதாரத்துறையைச் சந்தடி சாக்கில் முழுமையாக மத்திய அரசின் கீழ் கொண்டு செல்வதற்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. புதிய கல்விக் கொள்கைக்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்ததை அலட்சியம் செய்துவிட்டு, அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளைச் செயல்படுத்தப் போவதாக அறிவித்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. கரோனா பேரிடரைப் பயன்படுத்தி நிலக்கரி, தாதுவளம், பாதுகாப்புத் தளவாட உற்பத்தி, வான்வெளி மேலாண்மை, விமான நிலையங்கள், விமானம் பழுது பார்த்தல் - பராமரிப்பு, யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் மற்றும் விண்வெளித்துறை ஆகிய எட்டு முக்கியத் துறைகளையும் பா.ஜ.க. அரசு தனியாருக்குத் தாரை வார்க்கப் போகிறது.

தொழில் வளர்ச்சியிலும், பொருளாதார முன்னேற்றம், சுயசார்பு தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றில் இந்தியா சிகரம் தொடுவதற்கு அடித்தளமாக விளங்கிய பொதுத்துறை நிறுவனங்களை, முழுக்க முழுக்க தனியார் பெரு முதலாளிகளுக்கு ஏலம் விடும் அக்கிரமத்தை எப்படிச் சகித்துக்கொள்ள முடியும்? கரோனா கொள்ளை நோயைவிட பெரிய துயரம், நாடு பாசிச ஆக்டோபஸ் கரங்களால் நெறிக்கப்படுவது ஆகும். இத்தகைய சர்வாதிகாரப் போக்குகளை மக்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் " எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'கரோனா தடுப்புப் பணிகளைச் செயலிலே காட்டுங்கள்; இனியும் நம்பிக்கை வார்த்தைகள் வேண்டாம்' - ராமதாஸ்

ABOUT THE AUTHOR

...view details