தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ ஆக எம்.சி.சண்முகையா பொறுப்பேற்பு! - ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ ஆக எம்.சி.சண்முகையா

சென்னை: ஒட்டப்பிடாரம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி. சண்முகையா சட்டப்பேரவை உறுப்பினராக, முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.

திமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா
திமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா

By

Published : Jun 19, 2021, 3:39 PM IST

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடத்தில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. கடந்த மே 7ஆம் தேதி ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் வெற்றிபெற்ற மற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். கரோனா தொற்று காரணமாக ஒட்டப்பிடாரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி. சண்முகையா பதவி ஏற்கவில்லை.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில்
சபாநாயகர் அப்பாவு கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த எம்.சி. சண்முகையாவிற்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

வருகின்ற 21ஆம் தேதி சட்டப்பேரவைக் கூடவுள்ள நிலையில் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: சுஷில் ஹரி பள்ளியின் ஆங்கில ஆசிரியை முன் ஜாமின் கோரி மனு!

ABOUT THE AUTHOR

...view details