தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எம்பிபிஸ் படிப்பில் 5600 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை - எம்பிபிஎஸ்

சென்னை: இந்தாண்டு மருத்துவப்படிப்பில் 5,600 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயண பாபு தெரிவித்துள்ளார்.

director
director

By

Published : Jul 24, 2020, 10:50 AM IST

Updated : Jul 24, 2020, 8:07 PM IST

மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயண பாபு நமது ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், “தமிழ்நாட்டில் உள்ள 25 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3600 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதேபோல் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆயிரத்து 950 இடங்கள் உள்ளன. மேலும் இந்தாண்டு கூடுதலாக கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரியில் 50 இடங்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. எனவே இந்தாண்டு 5600 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும்.

தமிழ்நாட்டில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டியுள்ளார். அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. எனவே, ஒரு கல்லூரிக்கு 150 இடங்கள் என மொத்தம் 1650 மருத்துவ இடங்கள் வரும் கல்வியாண்டில் கூடுதலாக நமக்கு கிடைக்கும்.

எம்பிபிஸ் படிப்பில் 5600 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை

அதேபோல், ஏற்கனவே ஆயிரத்து 758 முதுகலை பட்டப்படிப்பு பாடப்பிரிவுகள் உள்ளன. இந்தாண்டு கூடுதலாக 161 இடங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், முதுகலை பாடப்பிரிவில் மொத்தம் 1919 இடங்கள் உள்ளன “ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'சித்த மருத்துவம் மூலம் கரோனாவைக் குணப்படுத்த முடியுமா என்பது குறித்த ஆய்வுகள் நடைபெறுகின்றன'

Last Updated : Jul 24, 2020, 8:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details