மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை வைத்துவருகின்றனர். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மயிலாடுதுறையை தனி மாவட்டமாகப் பிரிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றுவருவதாகத் தெரிவித்திருந்தார்.
புதிய மாவட்டமாக உருவாகும் மயிலாடுதுறை!
10:56 March 24
சென்னை: நாகை மாவட்டத்தைப் பிரித்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விதி எண் 110இன் கீழ் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து உருவாக்கப்படும் இந்தப் புதிய மாவட்டம் மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதன்மூலம் தமிழ்நாட்டிலுள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 38ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா நிவரணம் - முதலமைச்சரின் முக்கிய அறிவிப்புகள்!