பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. அதன்படி, தமிழ்நாட்டில் செயல்படும் பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் 84.76 விழுக்காடும், அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்கள் 93.64 விழுக்காடும், மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளிகள் மாணவர்கள் 98.26 விழுக்காடும், இருபாலர் பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் 91.67 விழுக்காடும், பெண்கள் பள்ளியில் பயின்ற மாணவிகளில் 93.75 விழுக்காடும் , ஆண்கள் பள்ளியில் பயின்ற மாணவர்களில் 83.47 விழுக்காடும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்; மெட்ரிக்குலேசன் பள்ளிகள் சாதனை - பன்னிரெண்டாம் வகுப்பு தேர்தல் முடிவுகள்
சென்னை: 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
Matriculation
அதேபோல் அறிவியல் பாடப்பிரிவில் பயின்ற மாணவர்களில் 92.75 விழுக்காடும், வணிகவியல் பாடப்பிரிவுகளில் பயின்ற மாணவர்களில் 90.78 விழுக்காடும், கலைப்பிரிவுகளில் பயின்ற மாணவர்களில் 80.13 விழுக்காடும், தொழிற்பாடப்பிரிவில் பயின்ற மாணவர்களில் 82.70 விழுக்காடும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.