இன்று (ஆக.13) சென்னை கலைவாணர் அரங்கில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தற்போது நிதிநிலை அறிக்கை உரை நிகழ்த்தி வரும் நிலையில் ,பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து அறிவித்து வருகிறார்.
முதன்முறையாக இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுவரும் நிலையில் நிதியமைச்சர் தொடர்ந்து திட்டங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில், மகளிர் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு ஒன்பது மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.