தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கைவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்! - பொதுத்தேர்வு

சென்னை: ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளை கைவிட்டு, ஆரம்பப் பள்ளியின் கல்வி தரம் உயர நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

balakrishnan
balakrishnan

By

Published : Jan 24, 2020, 7:32 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்த ஆண்டு முதல் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது குழந்தைகள் மத்தியிலும், பெற்றோர் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு இது குறித்து முடிவெடுக்கும் முன்பே, தமிழ்நாடு அரசு முந்திக்கொண்டு நாட்டிலேயே முதல் மாநிலமாக இத்திட்டத்தை அமல்படுத்த முயற்சிப்பது மாணவர்களை மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் நடவடிக்கையாகும்.

கல்வியில் சிறந்து விளங்கும் உலக நாடுகளில்கூட 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் நடைமுறை இல்லை. பொதுத்தேர்வுகள் மாணவர்களுக்கு பெரும் மன உளைச்சலையும், குழப்பங்களையுமே ஏற்படுத்தும். குழந்தைகளின் கல்வி அறிவு வளர எந்த பயனையும் இது அளிக்காது.

பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, உரிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாதது, புதிய முறையிலான பயிற்சிகள் இல்லாதது போன்ற காரணங்களால் நாடு முழுவதும் ஆரம்பப்பள்ளியில் மாணவர்களின் கல்வித் தரம் மிக மோசமாக உள்ளது. தமிழ்நாட்டிலும் இதே நிலைமை இருக்கிறது. உரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி மாணவர்களின் கற்றல் திறனை வளர்ப்பதற்கான நவீன முறைகளை கையாள்வதற்கு மாறாக, சிறு வயது மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகளை புகுத்துவது, அவர்கள் மீது தொடுக்கப்படும் வன்முறையாகும்.

எனவே, தமிழ் சமூகத்தின் எதிர்கால மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு தடை கல்லாக அமைந்துள்ள 5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுத்தேர்வு முறையினை கைவிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். அதோடு, தமிழ்நாடு அரசின் இத்தேர்வு முறையினை எதிர்த்து மாணவர்களும், இளைஞர்களும், அனைத்துப் பகுதி மக்களும் கண்டனக் குரலெழுப்பிட வேண்டும் ” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: குருப் 4 தேர்வில் முறைகேடு உறுதி: 39 தேர்வர்கள் பட்டியல் நாளை வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details