தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

என்கவுண்டர் அல்ல; திட்டமிட்ட படுகொலை - கே.பாலகிருஷ்ணன்

சென்னை: தெலங்கானா என்கவுண்டர் ஒரு திட்டமிட்ட படுகொலை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

balakrishnan
balakrishnan

By

Published : Dec 6, 2019, 5:35 PM IST

Updated : Dec 7, 2019, 9:17 AM IST

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 63 ஆவது நினைவு நாளையொட்டி சென்னை சைதாப்பேட்டை எம்.சி.ராஜா விடுதியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன்,
“சாதியக் கட்டமைப்பை, கொடுமைகளை, வர்ணாசிரமத்தை எதிர்த்து வாழ்நாள் முழுவதும் போராடியவர் அண்ணல் அம்பேத்கர். ஆனால், இன்றைக்கும் சாதியக் கொடுமைகள் தலை விரித்தாடுகிறது. கூலித் தொழிலாளிகளாக உள்ள தலித் மக்கள் பொருளாதார சுரண்டலுக்கு மட்டுமல்ல, சமூக ரீதியாகவும் சுரண்டப்படுகின்றனர் ” என்றார்.

வெங்காய விலையேற்றம் குறித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது தொடர்பாக பதிலளித்த அவர்,“ துணிகளின் விலைகள் கூட உயர்கிறது. அதற்காக ஆடை உடுத்தாதீர்கள் என்று சொல்ல முடியுமா? மத்திய நிதியமைச்சர் கொச்சைத்தனமாக பதில் அளித்திருக்கிறார் ” என்றுத் தெரிவித்தார்.

தெலங்கானா என்கவுண்டர் குறித்தக் கேள்விக்கு,
“ திஷா எரித்துக் கொல்லப்பட்ட நிகழ்வில் தொடர்புடைய கொலைகாரர்களுக்கு அதிகபட்ச தண்டனையை அரசியலமைப்புச் சட்டப்படி நீதிமன்றம் மூலம்தான் தரவேண்டுமேத்தவிர, காவல்துறை அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு 4 பேரையும் என்கவுண்டர் செய்திருப்பது விபரீதமான விளைவுகளையே ஏற்படுத்தும்.
4 பேரையும் சுட்டுச் சாகடித்திருப்பது திட்டமிட்ட படுகொலை ” என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

இதையும் படிங்க: ஹைதராபாத் திஷா வழக்கு: குற்றவாளிகள் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்

Last Updated : Dec 7, 2019, 9:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details