தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

‘ஏழு பேர் விடுதலையில் ஆளுநருக்கு அரசு அழுத்தம் தர வேண்டும்’ - மார்க்சிஸ்ட்

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் தர வேண்டும என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

By

Published : May 9, 2019, 7:58 PM IST

marxist

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்கக்கூடாது என்று குண்டு வெடிப்பில் பலியான காவலர்களின் குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஏழு பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும், இதுகுறித்து ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுதவிர தமிழ்நாடு அமைச்சரவையில் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியும், மோடி அரசின் முட்டுக்கட்டை காரணமாக ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்நிலையில், அவர்கள் விடுதலை குறித்து உச்சநீதிமன்றத்தில் இருந்து வந்த வழக்குகள் இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறையில் வாடும் ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான உரிய அழுத்தத்தை ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு தர வேண்டும். ஆளுநரும் ஏற்கெனவே தமிழக அரசு செய்த பரிந்துரையின் அடிப்படையில் சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details