தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

17ஆம் தேதி முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சான்றிதழ்

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 17ஆம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

மதிப்பெண் சான்றிதழ்
மதிப்பெண் சான்றிதழ்

By

Published : Sep 14, 2021, 9:27 PM IST

சென்னை:தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றிருந்தால், அவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2019-2021 கல்வி ஆண்டில் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 17ஆம் தேதி முதல் மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பெற்றுக் கொள்ளலாம்.

மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள பள்ளிக்கு வருகை தரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பள்ளியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்டிப்பாக தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: மாநிலங்களவை தேர்தல் - திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details